அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, “கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது’ என்றார்.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.
பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.
ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்
பார்த்திபன்
இப்போதைக்கு அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் நான் இருக்கிறன், என நடிகர் விஜய் இன்று கூறியுள்ளார்.
இன்று சென்னையில் தனது கல்யாண மண்டபகத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார் விஜய். இந்த சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்ததால் நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகை, இணையதள, தொலைக்காட்சி செய்தியாளர்கள் குழுமிவிட்டனர்.
இந்த சந்திப்பில் விஜய் கூறியதாவது:கடந்த சில தினங்களாகவே எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்திதான் முதலில் நிற்கிறது. உண்மையைச் சொன்னால் நான் அந்தளவுக்குப் பெரிய ஆள் கிடையாது.
ராகுல் காந்தியை டெல்லியில் நான் சந்தித்தது உண்மை. எனது திரைப்படங்கள், நான் செய்துவரும் மக்கள் பணிகளைப் பற்றிதான் நிறைய பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால், அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது. அவரை சந்தித்தபோது அவர் என்னை நடத்திய விதம் எனக்கு மிக்க பிடித்திருந்தது. நானும், காங்கிரசும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறை தான் கொண்டுள்ளோம்.
இந்தியாவையே மாற்றிக் காட்ட வேண்டும் எனும் வேட்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கை நட்சத்திரமான அவருடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இது தமிழக மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் கிடைத்த பெருமை(!?) என்பேன். எதிர்கால இளைஞர்களை அரவணைத்து ஒருங்கிணைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கிருக்கிறது. எனவே இப்போதைக்கு எந்த அரசியல் முடிவையும் நான் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை. இப்போதைக்கு மக்கள் இயக்கத்தைச் சிறப்பாகத் தொடரப் போகிறேன்.
அரசியல் குறித்து உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் நான் உள்ளேன் என்பதே உண்மை. தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும். அதற்காக களத்தில் இறங்கிப் போராடுவேன். தொலைநோக்குப் பார்வையோடு ஒரு வளமான, வலிமையான அரசாங்கத்தை உருவாக்க எநதக் கட்சி முனைகிறதோ அவர்களோடு நான் கை கோர்ப்பது பற்றி முடிவு எடுப்பேன்.
வாழ்க தமிழ்…. வெல்க பாரதம் என்றார் விஜய் .
Thatstamil.com
மகுடி
ஐயோ , அடுத்த படம் எப்போண்ணு மட்டும் சொல்லுங்க? அது போதும். பேஜாராயீக்குது.
Murali
தமிழ் நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை.
ஜெயலலிதாவும், கருணாநிதி குடும்பமும் தான் தமிழ் நாட்டை ஆழ வேண்டுமா என்ன???.