இராணு வத்தினரிடம் சரணடைந்திருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைப் புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி வன்னியில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 49 புலி உறுப்பினர்களை வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இராணுவம் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்த போது, கடந்த மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்தததாகக் கூறப்படும் 49 விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்