பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.