அரசாங் கத்தை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெற்றிகரமாக முடிவடையு மென ஜப்பான் ஜனநாய கக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா தெரிவித்தார். இவர் எதிர் வரும் 16 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயகக் கட்சி ஐம்பது வருடங்களின் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசாங்கத்தை அமைப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வரும் யுகியோ ஹற்றோயாமா அமைச்சரவை நியமனங்கள் பற்றியும் அக்கறை காட்டுகின்றார்.
வெளிநாட்டுக் கொள்கை பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் சோசியல் சமூகக் கட்சியும் மக்கள் புதிய கட்சியும் வேறு பட்ட நிலைப்பாட்டிலுள்ளன. இவ்விரண்டு கட்சிகளையும் சேர்த்தே புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடையாததால் அமைச்சர்களின் நியமனங்களை ஒத்திவைக்கும்படி ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
சோசியல் சமூகக் கட்சி, மக்கள் புதிய கட்சியின் ஆதரவின்றி ஜப்பான் பாராளுமன்றத்தின் மேல்சபையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவ்விரண்டு கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டிய நிலையில் பிரதான கட்சியான ஜனநாயகக் கட்சியுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபையில் போதியளவு பெரு ம்பான்மை இக்கட்சிக்கு ள்ள போதும் மேல் சபை யில் இவ்விரண்டு சிறிய கட்சிகளின் ஆதரவும் தேவை ப்படுகின்றது.
சோமாலியக் கடற் கொள் ளையர்களைத் தோற்கடிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ஜப்பான் கப்பல் களை திருப்பி அழைத்து அவற்றுக்குப் பதிலாக காவ ற்படகுகளை அனுப்புமாறும் ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் வழங்க இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை 2010 ஜனவரியில் மீள அழைக்கும் படியும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வொப்பந்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைவதால் இவற்றை மீண்டும் புதுப்பிக்கக் கூடாதென்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் இது குறித்து எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென் றும் நிபந்தனை விடுத்துள்ளன. இவை அனைத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு ஓரிரு நாட்களில் இணக்கம் காணப் படுமென பிரதமராகப் பதவி யேற்கவுள்ள யுகியோஹற் றோயாமா நம்பிக்கை தெரிவித்தார்.