இராணுவசேவை அதிகாரசபையின் தலைவராக பொன்சேகாவின் மனைவி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காலை 9.07 மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவர் பதவியை சரத் பொன்சேகாவின் மனைவிக்கு வழங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இராணுவ அதிகார சபையின் தலைவராகப் பதவியேற்றிருக்கும் அனோமா பொன்சேகா இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் மகளிர் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *