ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு, மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்த மாநாட்டை இன்று நடத்துவதற்கே முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுதந்திரக் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள் அடங்கலாக சுமார் 100 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாடு முழுவதிலிமிருந்து சுமார் 5000 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ள இம்மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.