பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான “சுல்பிகார்’ இன்னும் சில தினங்களில் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நட்புறவான இவ்விரு நாடுகளினதும் கடற்படைகளின் நெருக்கமான செயற்பாட்டுக்கு இவ்விஜயம் வாய்ப்பாக அமையும் எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய நாடுகளுக்கான இத்தகைய விஜயம் வழக்கமானதொன்றாகும். ஆனால் அவசரகால சவால்கள், பாதுகாப்பு பலப்படுத்தல் மற்றும் தேசிய நலன்கள் போன்றவற்றின் காரணமாக இத்தகைய விஜயங்கள் அதிகரித்துள்ளன என பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் தெவிக்கப்பட்டுள்ளது