பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மட்டும் சுமார் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 6 பேர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதார துறை அதிகாரியும், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்க பிரிவின் தலைவர் வாசுதேவ் மூர்த்தி கூறுகையில்,கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 6 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இறந்த பெண்ணுக்கு 38 வயது என்றார். இதையடுத்து இந்தியா முழுவதும் சாவு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59, கர்நாடகாவில் 41 பேர் இறந்துள்ளனர். அதாவது, இந்த இரு மாநிலங்களில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர்.