காதலனை பார்க்காத முடியாத கண்கள் தேவையில்லை என்று கூறி காதலி ஒருவர் கண்களில் தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர்.
இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்லை என்று கூறி தனது கண்ணில் தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து தீ, முகம், கைகள், மார்பு என பரவி படுகாயம் அடைந்தார் மேனகா. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பார்த்திபன்
“காதலிற்குக் கணணில்லை” என்பதை இந்தப் பெண் ஒருவேளை தப்பாகப் புரிந்து விட்டாரோ??
chandran.raja
இந்தநிலைக்கு போககிட்டாலும் இந்தவயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். பாதிரியாக துறவியாக போய்விடுவோமா? என்றுகூட யோசித்ததுண்டு. சூழ்ந்திருந்த வறுமை இடம் கொடுக்கவில்லை.வயதும் போக இதிலிருந்து வெளிவந்துவிட்டோம்.அதன்பிறகு தான் புரிந்தது உலகத்தில் இவ்வளவு இன்பம் தரகூடிய விஷயங்கள் பலஉள்ளவை இருக்கிறதென்று. திரும்பதிரும்ப உறுட்டிஉறுட்டி படித்த புத்தகம் சிங்களநாவல் ஆசியரின் “நெஞ்சில் ஓர் ரகசியம்” புஷ்பா தங்கத்துரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது”. காதல் வெற்றியடைக்கூடாது. காதலில் தோல்வியடைய வேண்டும். அப்பதான் வாழ்வுமுழுவதும் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும. இல்லையேல் காதல் என்ற உண்மையான வடிவத்தின் “குட்டு” வெளிப்பட்டு விடும். அவசரபட்டு இந்தமுடிவுக்கு வந்த மேனகாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மாயா
காதல் தோல்வி மனதை எப்படித் தாக்கும் என்று சொல்ல முடியாது. இனி அந்த பெண், உயிரோடு மீண்டால் யார் பார்ப்பார்கள் என்று வேதனையோடு சிந்திக்கத் தோன்றுகிறது? வார்த்தைகளால் நினைக்க முடியாதது மனித மனம். வாழ்வு என்பது விரும்பிய இடத்தில்தான். அது நிறைவேறாத போது சாவை விரும்புகிறது மனம். இதுவே மனித இயல்பு. அந்த நிமிடங்களை தாண்டி விடுவோர் சிலரே….. அதற்கு கை கொடுப்பது நண்ப – நண்பிகளாகவே இருப்பார்கள். இப்படியான நேரங்களில் நண்ப – நண்பிகளே கடவுள்களாக காதலர் உயிர் காப்பவர்கள். அப்படி இல்லாதவர்கள் சாவில் சங்கமமாகிவிடுவதை எவராலும் தடுக்க முடியாது.
DEMOCRACY
நான் இந்தச் செய்தியைப் படித்தவுடன் எழுத நினைத்தது “இது ஒரு இலங்கைத் தமிழரது இணையத் தளத்தில் வந்தது,ஒரு “கிரிமினல் அஃபன்ஸ் ஆகும்” என்பதுதான்!.ஏனென்றால்,”வேலுப் பிரபாகரனின் “காதல்கதை” தரவுகளுக்கு அவர்கள் ஏற்கனவே மாறிவிட்டார்கள் என்று நான் நினைத்ததுதான்!அனால்,சந்திரன் ராஜாவின்,”புஷ்பா தங்கத்துரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது”. காதல் வெற்றியடைக்கூடாது. காதலில் தோல்வியடைய வேண்டும். அப்பதான் வாழ்வுமுழுவதும் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும. இல்லையேல் காதல் என்ற உண்மையான வடிவத்தின் “குட்டு” வெளிப்பட்டு விடும். அவசரபட்டு இந்தமுடிவுக்கு வந்த மேனகாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”–பார்த்தப் பிறகு, நான் படித்து ரசித்த “ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது”,அவரும் ரசித்திருக்கிறார் என்கிற போது!,ஜெயகாந்தனின்,”ஒரு மக்கள்,ஒரு வீடு” டையும் ரசித்திருப்பார் என்கிறபோது,”சிறிது நம்பிக்கை துளிர் விடுகிறது”!!
palli
காதலை ஒருவர் புரிந்து கொண்டால் அது வன்முறை;
அதே காதலை இருவரும் ஏற்று கொண்டால் அகிம்சை;
இந்த இரண்டுக்கும் நீதிபதிகள் சமூகமே,