தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வாரம் 40 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். 500 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான போராட்டம் நீடித்தால் அரசாங்கம் தலையீடு செய்ய நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.