விஸா இன்றி தமிழ்ப்பெண் லண்டனுக்கு அனுப்பியது தொடர்பாக பிரிட்டன் தூதரகம் விளக்கம்

visa.jpgகொழும் பில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறையான விஸா  இன்றி தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரஜாவுரிமை வழக்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பானதால் அவரை பிரித்தானிய அரசே தனது செலவில் லண்டனுக்கு அழைத்துச் சென்றது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கையற்கண்ணி கிருஷ்ணபிள்ளை (40 வயது) பெண்மணியே இவ்வாறு லண்டனுக்கு பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் அனுப்பப்பட்டிருந்தார். குடிவரவுச் சட்டங்களின் பிரகாரம் அவர்  லண்டனில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

எனினும் அதனை எதிர்த்து பிரிட்டன்  நீதிமன்றத்தில் அப்பெண் தாக்கல் செய்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்  விடயத்தில் பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பு உதவவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அரச செலவில் லண்டன் திரும்ப வேண்டும் என பிரித்தானிய எல்லை முகவர் அமைப்பு அறிவித்ததுடன், அதற்கான உதவிகளை கொழும்பில் உள்ள பிரிட்டன்  தூதரக அதிகாரி மேற்கொள்ளவேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே அவருக்கு விஸா இன்றி லண்டன் அனுப்பப்பட்டிருந்தார். என்று இது தொடர்பாக கொழும்பிலுள்ள தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    இங்கே இருப்பது சட்டம், நீதிமன்றம், நீதி !
    இதை கேள்விகேட்கிறது ஸ்ரீலங்கா அரசு? எழுதினதுக்கு பேப்பர்காரன் லசந்தாவை போட்டுத்தள்ளின அரசு, திசைநாயகத்துக்கு 20 வருடம் கடூளிய சிறை கொடுத்த அரசு…கேள்விகளுக்கு மட்டும் குறைச்சலில்லை.

    சட்டப்படி அரசு நீதி கொடுக்கவில்லை ஆயின் அவர் வெளிநாட்டுக்காரராக இருப்பினும் சொந்தச் செலவில் பிராயச்சித்தம் தேடும் ஒரு அரசை கேள்வி கேட்கினமாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்த விளக்கமே வினோதமாக இருக்கின்றது. இப்படி நாடு கடத்தப்பட்ட பலரை மீண்டும் கடத்திய நாடு தமது செலவிலேயே திரும்ப அழைத்த சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. ஆனால் எல்லாம் முறைப்படி இலங்கைக்கான குறிப்பிட்ட நாடுகளின் தூதரங்களினால் மீண்டும் விசா வழங்கப்பட்டு பயணச்சீட்டையும் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட இச்சம்பவம் பற்றி தனக்கொன்றும் தெரியாதென்று முதலில் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் தெரிவித்து இருந்தார். இப்போது தூதரகம் பொத்தம் பொதுவாக ஒரு அறிக்கையை விட்டுள்ளார்கள். அப்படியாயின் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரையும் மிஞ்சிய ஒருவர் பிரித்தானியத் தூதரகத்திலுள்ளாரா??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இதைப்போன்ற ஒரு சம்பவம் எனது நண்பனின் குடும்பத்தில் நடந்தது. வேறுசில காரணங்களால் (பொய்வழக்குகள் போடப்பட்டதால்) மேற்படிப்பு விசா மறுக்கப்பட்டு, பின்னர் உண்மையை விளக்கியபின்னர் விசா கிடைத்தது. ஆனால் விசா எடுத்து பயணத்துக்கு ஆயத்தம் செய்தபோது செக்கிங் என்ற பெயரில் வீட்டுக்கு வந்து அவரின் விசா பக்கத்தை கிழித்தனர் ‘அதிகார’ காரர். இது நடந்தது 1994 இல்! பின்னர் எத்தனையோ சிக்கல்களின் பின்னர் அண்டை நாட்டுக்கு அழைத்து அங்கிருந்து விசா வழங்கி அனுப்பிவைத்தனர் எம்பசிக்காரர்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்
    அப்ப அண்டை நாட்டிற்கு செல்ல எடுத்த விசா அதிகாரவர்க்கத்தால் கிழிக்க முடியாதவாறு இருந்ததா? மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு எதையாவது ஒப்பிற்காக எழுத வேண்டுமென்று எழுதியிருப்பது நன்றாகவே தெரிகின்றது.

    Reply