‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையினை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமே நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியினைப் போக்க முடியும். இவ்வாறு மூன்று கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன், புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரா ஆகியோரே மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.