அபிவிருத் தியின்றி சமாதானம் இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகங்களுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திய ஒரு தலைவராக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ ‘போப்ஸ்’; சஞ்சிகைக்கு வழங்கிய விசேட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இப்பேட்டியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,
யுத்தம் முடிந்து விட்டது. இனி நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்லும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். நான் முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவேன். நான் மக்களை சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள், பரங்கியர் என வேறுபடுத்திப்பார்க்க விரும்பவில்லை. நான் அவர்களை நாட்டை நேசிப்பவர்கள் என்றும் நாட்டை நேசிக்காதவர்கள் என்றுமே வேறுபடுத்திப் பார்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேவையான சந்தர்ப்பங்களில் தான் தமிழிலும் பேசுவதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களது சொந்த மொழியிலேயே பேசுவதன் மூலம் அவர்களோடு மிக நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்கால சூழ்நிலையில் கூட நாட்டின் பொருளாதாரம் வருடாந்தம் ஆறு வீத வளர்ச்சியைக் கண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 11 வீதமாக இருந்த பணவீக்கம் 1.1 வீதத்திற்குக் குறைவடைந்துள்ளதாகவும் தலாவீத வருமானம் 1200 டொலர்களில் இருந்து 2000 டொலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணி;ப்புபற்றி குறிப்பிட்ட அவர் நாம் எமக்கேயான இலங்கை மாதிரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதையே நான் விரும்புகின்றேன். உணவில் நாம் தன்னிறைவு அடைய முடியுமாக இருந்தால் கைத்தொழில் துறையில் தானாகவே முன்னேற முடியும். என்றும் குறிப்பிட்டுள்ளார்;.
கடைசிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வினவப்பட்டபோதுää நாம் ஆபிரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ நடந்தவற்றை பின்பற்றவில்லை. கடந்துபோனவற்றை தோண்டிக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்றே நான் நினைகிறேன். நாம் கடந்துபோனவற்றை மறந்து புதியதோர் வாழ்க்கையை புதிய சிந்தனைகளை ஆரம்பிக்க வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.