இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாம் ஜனாதிபதிக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் பேர் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும் அவர் கோரியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினையானது அனைத்து சமூகமும் அமைதியாக வாழும் வகையில் தீர்க்கப்படவேண்டும் என இதன் போது சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
லியாம் பொக்ஸுடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த அவர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதிக்கு உதவுமாறு லியாம் பொக்ஸ் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.