வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று தமது உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தருணத்தில், தமது இன்ப துன்பங்களைப் பக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த இராணுவத்தினர் அம்மக்கள் மீது மூர்க்கத்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த மக்களை முழந்தாளிட வைத்தும், மண்மூடைகள், முட்கம்பிச் சுருள்கள், கம்பிக்கட்டைகள் ஆகியவற்றைத் தலையில் சுமக்க வைத்தும் தண்டித்துள்ளனர்.முகாமிலுள்ள மக்களை உள்ளக இடம்பெயர்ந்தோராக வெளியுலகுக்குக் காண்பிக்கும் இலங்கை அரசாங்கம், எமது மக்களைக் கைதிகளைப் போன்று நடத்துவதைக் கைவிடவேண்டும்.
மேலும், தாங்கள் விரும்பிய பொழுதெல்லாம் குளித்துத் துணி துவைத்த இம்மக்கள் இன்று இருபது லிட்டர் தண்ணீருக்காக பத்து பதினொரு மணித்தியாலங்கள் வரை வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான மக்களின் இரவுகள் முகாம்களிலுள்ள கூடாரங்களுக்கு வெளியே குழாய்க் கிணற்றுக்கருகில்தான் கழிகின்றது. இதற்குத் தக்க மாற்று ஏற்பாட்டினை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
chandran.raja
சக்தி ஆனந்தன் கடந்தகாலத்தில் வன்னியில் பயங்கரவாதிகள் பயணக்கைதிகளாக லட்சகணக்கான மக்கள் பிடிபடுவதற்கும் பிடித்துப்போவதற்கும் முழுஒத்துழைப்பையும் பூரணமாக வழங்கியவர்கள். இதுவே தமிழர்தேசியக் கூட்டமைப்பு. தமிழ்மக்களுடைய இன்றைய பிரச்சனை முகாமையும் முகாமை சுற்றியிருக்கும் முள்வேலிக்கம்பிகளைப் பற்றியதல்ல. பயங்கரவாதத்திற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அரசாங்கத்திற்கு நிரூபிப்பதின் மூலமே தாம் வெளிவரமுடியும் என்பதை புலப்படுத்துவதே! இதுவே முகாமை அப்புறபடுத்துவதும் சுகந்திரவாழ்வுக்கு வழிவகுப்பதும்மாகும்.
வவுனியாவுள்ள சகலமுகாம்களை அப்புறப்படுத்துவதும் அதில்லுள்ள அப்பாவி மக்கள் பயங்கரவாததிற்கும் எந்த தொடர்புகளும் இல்லையென்பதை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்துவதே இன்றைய தேவையாகும். இந்தவிஷயத்தில் கூட்டமைப்பு சகல தகைமைகளையும் இழந்துள்ளது. தேசியக் கூட்டமைப்பு என்பது பயங்கரவாதிகளின் தெரிவுடன் தமிழுமக்களின் முன்காட்சியளிப்பவர்கள். இவர்கள் முயற்ச்சியனைத்தும் வன்னிமுகாம் மக்களுக்கு மேலும் துன்பம் விளைவிப்பவையே. இதை புரிந்துகொள்வதே நிரந்தரமாக முகாமை கலைத்து இருப்பிடங்களுக்கு போவதற்காக அரசாங்கத்துடன் ஒரு புரிந்துதுணர்வை ஏற்படுத்துவது. அது யார்?. டக்ளஸ் தேவானந்தா கருனா தமிழ்மக்களின் பிரதிநிதிகளா? இதை அவர்கள் நிரூபிப்பார்களா?.
மகுடி
மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே! : அரச ஆதரவு புலம்பெயர் தமிழர் குழு……………
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396
நன்றி: http://inioru.com/?p=4837
சாந்தன்
மக்கள் குற்றவாளிகளா இல்லையா என அரசுதான் நிரூபிக்கவேண்டுமன்றி மக்களல்ல. நல்ல ஜனநாயகம், இதை நம்பி ஒரு கூட்டம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு பயங்கரவாதிகளின் தெரிவா? யாழ், வவுனியா இலக்சனில பயங்கரவாதி வாக்களிச்சது போல கிடக்கு. அப்ப வோட்டுப் போட்டவனை பிடிச்சு உள்ளுக்கு போடுங்கோ!
chandran.raja
//அப்ப வோட்டு போட்டவனை பிடிச்சு உள்ளுக்கு போடுங்கோ!// சாந்தன்.
விரலை வெட்டுகிறதும் வோட்டு போடுகிறவனை உள்ளுக்கை போடுகிறதும் தான் மேமாதம் 19 ம்திகதிக்கு முன் வன்னியில் இருந்த நிலை சாந்தன். திரும்ப அந்த நிலைக்கு வக்காளத்து வாங்குவது கவலைக்குரியது. வன்முறைக்கு பின்னால் கூட்டமைப்பு ஒளிந்திருந்து கொண்டு நாடகம் மாடியதை தாங்கள் மறந்தாலும் வேறு யாரும் இலகுவில் மறந்து விடமுடியாது.
எத்தனை வீதமானமக்கள் வாக்களித்தார்கள்? மக்களின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்தது. இவர்கள் வெற்றிபெற்றது எதிர்த்து போட்டியிட்டவர்களின் பலவீனமாக இருக்கக்கூடாதா?. நாட்டைகாப்பாற்ற முன்னின்று உழைத்த வின்சன்சேர்ச்சில் யுத்தத்திற்கு பின்நடந்த
தோல்வியையும் இருபத்தாறே வயதான மாணதலைவனுக்கு முன் கர்மவீரர் காமராஜர் தோல்வியையும் நாம்அறிவோம். கூட்டமைப்பின் வெற்றி வவுனியா தமிழ் மக்களின்வெற்றி என நீங்கள் கருதினால் அது உங்கள் தவறானமுடிவே.
சாந்தன்
’…கூட்டமைப்பின் வெற்றி வவுனியா தமிழ் மக்களின்வெற்றி என நீங்கள் கருதினால் அது உங்கள் தவறானமுடிவே…..’
ஆஹா…தேர்தல் ஜனநாயகம்!
நீங்கள் ஆனந்தசங்கரி இல்லைத்தானே? அவர்தான்தான் தான் தோற்பதனால் ஸ்ரீலங்கா தன்னை இழக்கிறது என சொல்லிக்கொண்டு திரிகிறார்.
பார்த்திபன்
சாந்தன்
வவுனியாவில் கூத்தமைப்பிற்கும புளொட்டிற்கும் வெறும் 100 சொச்ச வாக்குகள் தான் வித்தியாசம். ஏனைய கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளையும் சேர்த்துப் பார்த்தால் கூத்தமைப்பிற்கு எதிராகக் கிடைத்த வாக்குகள் தான் அதிகம். அந்த விதத்தில் சந்திரன் ராஜாவின் கருத்து சரியானதே.