தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மகுடி
இவ்வளவு பணணத்தையும் வச்சுக் கொண்டா , இன்னமும் காசு கறக்க வீடு வீடா திரியிறாங்கள். காசு குடுக்ககிறவங்களுக்ககிட்ட , காசு குடுக்கிறம் எண்டு ஆருக்கிட்டயும் சொல்ல வேணாம் என்று வேற அட்வைசாம். அண்டகிரவுண்ட் அட்டாக்குக்காயிருக்குமோ?. நல்ல மேய்ப்பர்களும் மந்தைகளும் வாழ்க? வரிப் புலிகள் பணப் புலிகளாக மாறியுள்ளனர்?