இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற 1800 பேருக்கு பதவி உயர்வுக் கடிதங்களை கையளிக்கும் வைபவம் இன்று (30) கொழும்பு டி. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம்பெறுகிறது.
1992 ஜூன், 1994 ஜூன் மாதங்களில் இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் தரம் முதலாம் வகுப்பில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு சேவை மூப்பு திறமை அடிப்படையில் சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இந்நியமனங்கள் வழங்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.
இதற்காக, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்ட போது சகல ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு திருப்தி காணப்பட்டவர்களுக்கே இன்று நியமனம் வழங்கப்படுகிறது. ஏனையவர்களுக்கு குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டதும் நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையினையும் கல்வி அமைச்சு எடுத்து வருகிறது.