வவுனியா அரசாங்க அதிபர் பீ.எம். எஸ். சார்ள்ஸ் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார். புதுடில்லியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் இன்று புதுடில்லி செல்கிறார்.
தெற்காசிய பிராந்திய தரத்திலான அனர்த்த நிவாரண முகாமைத்துவம் பற்றிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே அவர் புதுடில்லி செல்கிறார்.
புதுடில்லி சென்று திரும்பும் அவர், 6ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். சீன மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டிற்காகவே அவர் சீனா செல்லவுள்ளார்.