தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.
பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.
நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.
மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.
பல்லி
அண்ணே காலம் கெட்டுகிடக்குது; சும்மா முந்திய மாதிரி எல்லாம் இப்ப பேசபடாது, அதுவும் உங்கள் மேல் மகிந்தா குடும்பத்துக்கு ஒரு காதல் உண்டு, இப்படி சின்ன பிள்ளைதனமாய் சில பெண்கள் அளவில்லாத உடுப்பை போட்டுவிட்டு இழுத்து இழுத்து விடுவதுபோல், தேவையில்லாமல் அறிக்கை விடுவதும் பின் பலமாதம் தலைமறைவு வாழ்வும் தேவையா? அதுவும் KP பாத்தனிங்கதானே, யாராவது அடுத்த தறுதலை தலை சிவாஜிதான் என கொழும்பு வட்டாரத்துக்கு போட்டு கொடுத்தால், அடுத்த சில மணி நேரத்தில் கோழி அமுக்கின மாதிரி அமுக்கி கொண்டு போடுவார்கள்; எதுக்கும் அவசரபடாமல் அமைதியாய் போடுங்கோ அகதி விண்ணப்பத்தை,
indiani
உங்களுக்கு பிரபாகரன் உயிருடன் உள்ளபோது அவருக்கு எல்லாம் தெரியும் தமிழீழம் நிச்சயம்…. இப்போ அவர் உயிருடன் உள்ளார்…. உங்கள் பேய்க்காட்டலுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் அகதிகளாக உள்ளவர்களை முகாம்களிலிருந்து மீட்டெடுக்க நீங்கள் தமிழீழம் பெற்றது போல் இந்த மக்களையும் வெளே எடுக்க முயற்ச்சிக்கிறீர்கள் எல்லாம் முள்ளி வாய்ககாலில் முடியும் உங்கள் கைங்கரியமாகவே இருக்கும்.
நீங்கள் புலிகளின் பணத்தை களவு எடுங்கள் பிரச்சினையில்லை தமிழ் மக்களை சும்மா விடுங்கள் அதற்றகாகத்தானே பிரபாகரனும் நீங்கள் போன்ற வல்வெட்டித்துறையாரும் பின்னர் புங்குடுதீவும் செய்தீர்கள் பின்னர் காசை களவு எடுக்க பிரபாகரனையே பலி கொகாடுத்தீர்கள் உங்கள் அடிபிடி உங்களாலேயே வெளிவரும் பொறுத்திருங்கள்.
உம்போன்ற புலிவால்களை இலங்கை அரசு உள்ளே விடக் கூடாது. விடவும் மாட்டாது பொறுத்திருக்கவும் இலங்கை அரசு……………….. இல்லா விட்டால் நீரும் இனிமேல் புரட்ச்சி பேசுவீர் என்பது எமக்கு தெரியும்.
thaya
http://www.youtube.com/watch?v=5XruAWhg5ws
nadesh
கடைசியில் ரெலோவுக்கு ஆப்பு வைத்துவிட்டார் சிவாஜி. ஆறுதலாக தேர்தல் முடிவுதெரிந்தபின் இக்கதையை திட்டமிட்டு கதைக்கிறார். ஆரம்ப காலத்தில் சிறீசபா சாக இவரும் காரணம் என ஒரு சந்தேகம் இருந்தது. அது இப்போது இந்த ஸ்ரேற்மென்ட்டுடன் உறுதியாகிறது.
மாயா
இவங்களை எல்லாம் யாரப்பா பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தது? தமிழன்கள்தான் என்று சொன்னால் , இலங்கையில் படித்த இனம் என்று ஒன்று இருந்தது. அவர்கள் தமிழர்கள் என்று சொல்லப்பட்டனர். இப்போ? ஐயோ….முட்டுப்படுறதெல்லாம் முட்டாள் பயல்களாக இருக்காங்களே?
பார்த்திபன்
விதி யாரை விட்டது. தலையின் மறைவு சிவாஜிலிங்கத்தாரையும் இப்படி புலம்ப வைத்துவிட்டது. பாவம் சிவாஜிலிங்கத்திற்கு நாட்டுப்பற்றாளர் விருது கொடுப்பதற்கும் ஆளில்லை.
Devan
முப்பது வருடமாக உங்கள் விருப்பப்படி பேய் ஆட்டம் ஆடின நீங்கள் இனியாவது மக்கள் நலன் கருதி ஒதுங்கி இருப்பது தான் நல்லது. இல்லையென்றல் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்களும், வைகோவும்………….. .
sekaran
சிவாஜிலிங்கம் உயிருடன் எங்கோ இருக்கிறார் என்று நம்பத்தக்க தகவல்கள் கிடைத்திருக்கிறதே. அது போதும். எங்கிருந்தாலும் வாழ்க. (இங்கே வராமல் இருந்தாலே போதும்.)
thurai
சிவாஜிலிங்கம் சொல்வது உண்மையே!
பிரபாகரனால் தமிழ்மக்களிடையே விதைக்கப்பட்ட , சிஙகள விரோதம், தமிழனைத் தமிழனே கொல்லுதல், தமிழனைத் தமிழனே ஏமாற்ரி பணம் பறித்தல் இந்தச் செயல்களெல்லாம் தமிழரிடையே அழிந்ததாக இல்லை. இவைகள் தமிழரிடம் உள்ளவரை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே
கருதப்படும்.
துரை
Kamal
சிவாஜி புலிக்கு தொடர்ச்சியாக வேலை செய்து ரெலோ அழிப்பிற்கு உதவியவர். அதாலைதான் ரெலோக்காரர் வெளிநாடுகளில் உள்ள பழைய ரெலோப் பெடியளைச் சந்திக்காமல் ஒழிக்கிறவர்.