காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.
நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
BC
விஜய் அரசியலுக்கு வரவேண்டுமானால் முதலில் புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடம் அனுமதி பெற வேண்டும்.அவர்களின் அனுமதியை விஜய் பெறுவாரா?
uma maheswaran
vijay dont need any one approval mai,he has own right to chose his own choice and can be in his own way ,we dont owns him.i am a ajith fan but i love democracy do you?
பல்லி
மாபெரும் நடிகர் சிவாஜி கனேசனையே இந்த காங்கிறஸ் அரசியல்தான் அடங்க செய்தது, விஜயின் ரசிகர் பலருக்கு வாக்கு இல்லை என்பது கூடவா ராகுலுக்கு தெரியாது, இள்யவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், ஆனால் அதுக்காக நடிகர்கள் வர வேண்டும் என்பது ஒரு விளம்பர கையாடல்தான், சிரிப்பதுக்கும் அழுவதுக்கும் பணம் வாங்கும் இவர்களா அரசியல் வாதிகள், சில காலத்துக்கு முன்பு பிரபுதேவாவுடன் விஜய் ஒரு தொலைகாட்ச்சிக்கு பேட்டி கொடுத்தார், அதில் அந்த படத்தின் தோல்வி பற்றி ஊடகவியாளர் கேட்டபோது விஜய் தனது சுய அறிவான (கோபத்தை) காட்டினார், அது அவரது தனி உரிமை, ஆனால் அரசியலில் கோபமும் பிடிவாதமும் தடை செய்யபட வேண்டும் அல்லவா? எது எப்படியோ இது விஜய்க்கு அட்டமத்து சனி மட்டுமல்ல வியாளனும் கூட;;;