இலங் கையில் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வந்த டெங்கு நோயின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ள போதும் தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தலைதூக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே மழை பெய்யும் காலங்களில் தமது வீட்டையும் சுற்றுச் சூழலையும் சுத்தமாகப் பேணுவதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்