சம்பள அதிகரிப்பு உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள மின்சார சபை ஊழியர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திலீடுபட விருக்கின்றனர். அரச்சாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைவதற்கு 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உடன்பாடுகண்டுள்ளன.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் சம்பள அதிகரிப்பைச் செய்யத் தவறியமை, மின்சார சபையை அழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாபநிதியின் மூலம் கிடைக்கும் அனுகூலங்களை நீக்கும் முயற்சிகளை உடன்கைவிடுமாறும் மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளில் கைவைக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்தும் நான்கு கோரிக்கைகளை இத்தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ளன.