உமா ஆறு நீர்ப்பாசனத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கும் வடிவமைப்பதற்கும் தேவையான அளவீடுகள் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு 590 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதோடு 2014 ஆம் ஆண்டு திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜே. வி. பி. பாராளுமன்ற எம். பி. யான கே. வி. சமந்த வித்யாரத்ன எழுப்பிய வாய் மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-
உமாஆறு நீர்ப்பாசன திட்டத்திற்கு 2008 4 ஆம் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கான முழுச் செலவில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈரான் அரசு கடனுதவியாக வழங்கியுள்ளதோடு அரசு 140 மில்லியன் டொலர் ஒதுக்கியுள்ளது.