ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கிய குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rajanikanth.jpgரஜினி காந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    டைம்ஸ் ஒப் இந்தியா நிராகரித்து விட்டால் உண்மை பொய்யாகிவிடுமா?? ஐங்கரன் எப்படி தயாரிப்பு நிறுவனமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. ஆரம்பத்தில் ரஜினியின் “எந்திரன்” திரைப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிதததும், பின்பு சங்கருடன் ஏற்பட்ட முறுகலால் அத்திரைப்படத் தயாரிப்பு சண் குழுமததிற்கு கை மாறியதும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விடயமா??

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் இப்போதுதான் இருப்பவனுக்கு வீடு சொந்தம் குளிப்பவனுக்கு குளம் சொந்தம் உளவனுக்கு நிலம் சொந்தம் என்பது போல் புலியின் அசையும் அசையா சொத்துகள் யாவும் அவரவர்க்கே சொந்தமாம், கோவில் ஜயருக்கு, கடை நின்றவருக்கு; சேத்த பணம் சேத்தவருக்கு; இப்படி பலதும் பத்தும் நடக்கையில் அதும் ஜங்கரன் சொத்தாகி விட்டதால் எனி புலி பணம் என சொல்லபடாது, இதைதான் கறுப்பு வெள்ளையான படம் என்பதாம்; அதுசரி வட்டியுடன் திருப்பி தருவதாக புலி வேண்டிய பணத்தை கொடுத்தவர்கள் முழு விபரத்துடன் சென்று இலங்கை அரசின் நிதி துறையிடம் பெற்றுகொள்ள கே பி கதைத்துள்ளாராம்; ஆகவே விரும்பியவர்கள் மகிந்தாவின் கடைசி தம்பியிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறவும், அவர் வீட்டில் தான் கே பி தங்கியுள்ளார்;

    Reply
  • மாயா
    மாயா

    தமிழக சினிமாக்காரரை திட்டிக் கொண்டும் பகிஸ்கரித்துக் கொண்டும் புலிகள் தமது பினாமிகளூடாக பல திரைப்படங்களை தயாரித்தார்கள். வெளிநாடுகளில் ஷோக்கு சுந்தரிகளைக் கொண்டு கலை சேவை என்று ரசனை கொஞ்சும் நிகழ்வுகளையும் செய்துள்ளார்கள். காசு எங்கு கொட்டுமோ அங்கே தமது கொள்கைகளை புறந்தள்ளி விட்டு புலிகள் எதையும் செய்தவர்கள்.

    கொழும்பு உயர் இராணுவ அதிகாரிகளை மயக்க சுந்தரிகளை வைத்து மாமா வேலை கூட செய்தார்கள். உலகத்தை திருத்த முன் தான் திருந்தி நடக்க வேண்டும். அது இவர்களிடம் இருக்கவே இல்லை.

    Reply