யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

00jaffnabus.gif
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு வழிபடுவதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  பேருந்துகளில் புறப்பட்டு வந்த இவர்கள், வவுனியாவுக்கு வடக்கே ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பயண அனுமதி மறுக்கப்பட்ட தாங்கள் தங்குமிட வசதிகளின்றி சிரமப்பட்டதாக அந்த யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வந்திருந்தவர்களில் சுமார் 400 பேர் வரையில் வவுனியா மடுக்கந்தை பெளத்த விகாரையில் நேற்றிரவு தங்கியிருந்தார்கள். ஏ9 வீதி ஊடாக பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரலாம் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையடுத்தே தாங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காகப் புறப்பட்டு வந்ததாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கெப்பிட்டிகொல்லாவ, ஹொரவப்பத்தானை வழியாக வவுனியாவை வந்தடைந்ததாக இந்த யாத்திரிகர்களை ஏற்றிவந்த பேருந்துகளின் சாரதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது என ஓமந்தையில் வைத்து திருப்பிவிடப்பட்டதை அடுத்து, மடுக்கந்தை விகாரையில் நேற்று முன்தினம் இரவைக் கழித்துவிட்டு, மதவாச்சி ஊடாக அனுராதபுரத்தி்ற்குச் செல்வதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் இதனால் வவுனியாவில் இருந்து தாங்கள் மீண்டும் திருகோணமலை வீதிவழியாகவே செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    நாக விகாரை வரை போக முடியாவிட்டாலும் , வவுனியா வரை வர முடிந்தது என ஒரு சிங்களவர் மகிழ்வோடு சொன்னார். நிலமை எப்படி இருந்து எப்படி மாறியிருக்கிறது? இருந்தாலும் அநியாயக் கைதுகளும் , கொலைகளும் நின்றால் மக்கள் நிச்சயம் மகிழ்வார்கள். நீதி கிடைக்குதோ இல்லையோ மக்களுக்கு நிம்மதியாவது கிடைக்கட்டும். ஈழமும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    தம்பி பிரபாவுக்கு நன்றி;
    முப்பது வருடத்துக்கு முன்பு போராட புறப்பட்ட ஒரு போராளியை ஈழத்தை இழவோடு ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தமிழரை கொண்டு வந்துவிட்டதுக்கு நன்றியப்பா நன்றி;

    Reply
  • Saranan
    Saranan

    வயதும் போக எல்லாம் மறக்குது ஆரியகுளம் சந்தியில உள்ளதை எல்லோ நாகவிகாரை எண்டு சொல்றவையள்? சாp எதெப்படியோ வவுனியாக்கிஞ்சால வரவே விடயில்லை எண்டால் இதுவரையும் குடியேற்றவுமில்லை எண்டு அர்த்தம். இது தொடர்பா மகிந்தா அரசில பிழையேதும் பூந்துபிடிக்க ஒரு தரும் வரயில்லை

    Reply