கடந்த மூன்று தினங்களில் திறைசேரி உண்டியல் விற்பனை மூலம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இலங்கையின் பொருளாதரக் கட்டமைப்பின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். பொருளாதாரம் சிறந்த முறையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் பயமின்றி முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதனால்தான் பெரும் எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் இலங்கை மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கு பெருந்தொகையான வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதனால் தனியார் வங்கிகளிடம் கடன் பெறவேண்டிய தேவை ஏற்படாது. தனியார் வங்கிகளும் தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்கலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மூலம் இவ்வருட இறுதியில் வட்டிவீதம் மேலும் குறைவடையும். சுமார் 9 வீதம் வரைக் குறையுமென எதிர்பாக்கமுடியும். இதனால் தொழில் வாய்ப்புக்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
chandran.raja
900 பில்லியன் டொலர் என்பது உங்கள் தவறான கணக்கு. சரி செய்யவும். ரூபா கணக்கில் பார்தாலும் சந்தேகமாக இருக்கிறது.
பார்த்திபன்
chandran.raja குறிப்பிடுவது சரி. செய்தியைப் பதிந்தவர் 900 மில்லியன் என்பதை 900 பில்லியன் என தவறாகப் பதிந்துள்ளார்.
சஜீர் அகமட் பி,
//chandran.raja
900 பில்லியன் டொலர் என்பது உங்கள் தவறான கணக்கு. சரி செய்யவும். ரூபா கணக்கில் பார்தாலும் சந்தேகமாக இருக்கிறது.//
டைப்பிங் தவறுக்கு வருந்துகிறேன்
-திருத்தம் 900 பில்லியன் அல்ல 900 மில்லியன் என்பதே சரியானது
பல்லி
கணக்கில் கூட தேசநண்பர்களிடம் இருந்து தப்ப முடியாது; இதை பலர் புரிந்து கொண்டு அரசியல் செய்வது நல்லதுதானே, பின்பு அவமானபடாமல்,