கொக்கா வில் ஒலி, ஒளிபரப்பு பரிவர்த்தனை மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் ஊடகத்துறையமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் நாட்டினர். நேற்று நண்பகல் 12.45 அளவில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் 180 நாள் திட்டத் தின்கீழ் வட மாகாண ஒலி, ஒளிபரப்பு தொலைத் தொடர்பு தேவைகளை; பூர்த்தி செய்யும் வகையில் 400 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள 172 மீற்றர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்துடனான பரிமாற்று நிலையம் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் செயற்படவுள்ளது. அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட அனைத்து தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் இதனூடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஐ.ரீ.என். ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.