பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 2வது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்களிலும் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களிலும் வெற்றி பெற்றன.
முதல் மற்றும் 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றும். இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும். ‘டிரா’ ஆனால் தொடர் சமநிலையில் முடியும்.
இங்கிலாந்து சகலதுறை வீரர் பிளிண்டொப் ஏற்கனவே ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் இதுவாகும். உடல் தகுதி இல்லை என்று கூறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஆடாதது அந்த அணிக்கு தொல்வியை ஏற்படுத்தியது.
ஆஷஸ் தொடரை கைப்பற்றி ஓய்வுபெற வேண்டும் என்பது அவரது இலக்காக உள்ளது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.