வரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு யாழ் குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடாந்த திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையே நடைபெற்று வரும் உள்ளுர் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையம் என்பன இரதோற்சவத்தையும் தீர்த்தத்திருவிழாவையும் நேரடி ஒலி ஒளிபரப்பு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.