இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட விரரான திலக்கரத்ன டில்ஷான் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் இன்று காலை குறைந்த பந்துகளுக்கு அரைச்சதம் அடித்து சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கும் நியுஸிலாந்துக்கும் இடையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே டில்ஷான் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவர் 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.
அர்ஜூன இந்திய அணியுடனான போட்டி ஒன்றின் போது 31 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஆட்ட முடிவின் போது இலங்கை கிரிக்கெட் அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் பெற்றிருந்தது.