ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.
இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.
ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மாயா
ஹமீத் கர்சாய் தனது இருப்புக்காக அப்பாவிகளை பலியாக்கி விட்டார். பெண் சமையலே செய்யாமல் விட்டால் அனைவரும் பட்டினிதானே?
பார்த்திபன்
ஹமீத் கர்சாய் முன்பு இதே சட்டத்தை எதிர்ப்புகளினால் மீளப்பெற்றுவிட்டு தற்போது தனது பதவியை தேர்தலில் தக்க வைக்க மீண்டும் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் மக்கள் தான் இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.