அரசாங்க ஊழியர்கள் கைவிரல் அடையாளத்தின் மூலம் வரவுப் பதிவு செய்யும் இயந்திரத்தின் அறிமுக நிகழ்வு நேற்றைய முன் தினம் யாழ் செயலகத்தில் இடம்பெற்றதுடன் அந்த இயந்திரத்தை வழங்கிய கொழும்பு மெற்ரோ பொலிட்டன் நிறுவனத்தின் விரிவுரையாளர் திலக் பனாண்டோ யாழ் அரசாங்க அதிபர் கே. கணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கைவிரல் அடையாளம் மூலம் வரவுப் பதிவு இயந்திரத்தை விரிவுரையாளர் திலக் பனாண்டோ வைபவரீதியாக யாழ் அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் அந்த இயந்திரத்தின் செயற்பாடுகள் பாவனை என்பன தொடாபாகவும் அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை தற்போது முதற் கட்டமா வழங்கப்பட்டுள்ள 16 இயந்திரங்களும் யாழ் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பொறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.