தமிழ்நாடு, காங்கிரஸ் அலுவலகத்தில் பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்

கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில், அதன்மேல் விடுதலைப்புலிகளின் தேசியக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் படம் இருக்கக்  காணப்பட்ட சம்பவத்தால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14 ம் திகதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவத்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு பக்தவத்சலம் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் மீது விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரன் படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதால், தாமதமாக பொலிஸாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடி எரிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • மாயா
    மாயா

    அடடா , தலைவர் உயிர்தெழுந்துட்டாரா? தமிழ்நாட்டு சனம் நம் தமிழர்களை விட மொக்குகள். இன்னும் “தமிழீழம் வெல்லட்டும்! தமிழ்த்தேசம் மலரட்டும்!” எனும் சனம்கள். தமிழ் நாட்டில் இருந்து மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நம் சனம் திருந்தினாலும், இவர்கள் திருந்தார்கள்.

    Reply
  • அல்வாய் அழகசுந்தரம்
    அல்வாய் அழகசுந்தரம்

    இந்தியாவிலேயே தேசப்பற்றட்ட மக்கள் அதிகளவில் வாழும் மாநிலம் தமிழ் நாடு. தமிழ்நாட்டு தமிழரைவிட சிங்களம்பேசும் இலங்கையரிடம் தேசப்பற்று, கலை கலாச்சாரம் என நிறையவே இருக்கு. வெறும் மாயைக்குள் கானல்நீரை நம்பி குருட்டுதனமாக கனவுலகில் வாழ்பவர் இலங்கையில் பிறந்த தமிழ்பேசுபவர். யாழ்ப்பாண தமிழருக்கும் தேசப்பற்றே கிடையாது சொத்து சேர்த்து ஊருக்கு ஷோ காட்டி செத்து போகும் பிச்சைக்கார சிந்தனையில் ஊறிய. கூட்டம்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கொலையும் வெறியுணர்வும் தமிழ்நாட்டிலும் தொடரும் என்பதை அறிவுறுத்துகிறார்கள்.வன்முறையின் பலன் அழிவை காண்பது மட்டுமே என்பதை தாமும் அனுபவப்பட்டு அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    யாழ்ப்பாண தமிழருக்கும் தேசப்பற்றே கிடையாது சொத்து சேர்த்து ஊருக்கு ஷோ காட்டி செத்து போகும் பிச்சைக்கார சிந்தனையில் ஊறிய. கூட்டம்
    100% RIGHT
    THEIR NATIONALITY IS KINGDOM OF MONEY

    Reply
  • BC
    BC

    //அல்வாய் அழகசுந்தரம் – வெறும் மாயைக்குள் கானல்நீரை நம்பி குருட்டுதனமாக கனவுலகில் வாழ்பவர் இலங்கையில் பிறந்த தமிழ்பேசுபவர். யாழ்ப்பாண தமிழருக்கும் தேசப்பற்றே கிடையாது சொத்து சேர்த்து ஊருக்கு ஷோ காட்டி செத்து போகும் பிச்சைக்கார சிந்தனையில் ஊறிய கூட்டம்.//

    உண்மை தான்.

    Reply
  • mike
    mike

    அகில உலகிலேயே பண ஆசை,பதவிஆசை,அத்தோடு பாவலா-பொறு சோபண எல்லாம் மொத்தமாக இரத்தத்தில் ஊறியுள்ள ஒரே மனித இனம்: யாழ் தமிழினம் என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.இவர்கள் மத்தியில் ஒரு சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    மாட்டைக் கும்பிடு,நாயைக் கும்பிடு, பன்றியைக் கும்பிடு கல்லை கும்பிடு ஆனால் மனிதனை அடி, வெட்டு, கொல். இந்தப் பரம்பரை படத்தைக் கொழுத்தியதைப் பெரிதாய் எடுக்கலாமா?

    துரை

    Reply
  • அல்வாய் அழகசுந்தரம்
    அல்வாய் அழகசுந்தரம்

    கள்ளக் கடத்தல்காரர்களையும் காசு அடிப்பவர்களையும் பெரிதாக எண்ணும் யாழ்ப்பாணத்தவர்கள் காசு அடிக்ககூடிய உத்தியோகத்தில் இருந்தவர்களுக்குதான் நல்ல சீதனம் கொடுத்தனர். கள்ளக்கடத்தலையோ காசு அடிப்பதையோ யாழ்ப்பாணத்தவர்கள் கூடாததாக எண்ணவே இல்லை. இலங்கையில் லஞ்சஊழலை வளர்த்த பெருமை யாழ்ப்பாணத்தவர்களையே சாரும்

    Reply
  • Saranan
    Saranan

    கைதட்டுக் கிடைக்குமென்று கன்னா பின்னா எனப் பேசுவது போல அல்வாய் அழகுசுந்தரத்தின் எழுத்து. கல்வியாளர் வடமராட்சி > தீவுப்பகுதி / கடத்தல் வல்வெட்டித்துறை / கசிப்பு உரும்பிராய் இப்படிப் பெயரெடுத்தாலும் இந்தப் பகுதிகளோ கிராமங்களோ நூறுவீதம் ஈடுபடும் என்றில்லாத போது யாழ்ப்பாணத்தான் /யாழ்மையவாதம் இப்படிப் பேசி ஏழ்மைக்குக் கடுப்பேற்றாதீர்கள்.அன்றிருந்து இன்றுவரை பாறை பிளந்து பயனாக்கும் விவசாயிகள் /நாலுமுழ உடம்பை வளர்க்க நாற்பது முழம் தழுவும் தொழிலர் /உயிரைக் கைப்பிடித்து உயரக் கடலேறும் மீணவர்கள் இவர்களும் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள் வாழ்ந்தார்கள்! இவர்கள் இதுவரை எந்தத் கணிப்பிலும் 90 சதவீதத்த்தை குறைந்து வாழ்ந்ததாக இல்லை இப்படியிருக்க உங்களுக்குக் கிடைத் உதாரணங்கள் ஒனறிரண்டை வைத்து ஏனையோரை வேதனைப்படுத்த வேப்பிலை அடிக்கிறீர்hகள்?
    உண்மையில் இந்த செய்திக்கு இது தேவையற்ற எழுத்துப் பின்னூட்டம் மட்டுமல் பிரதேசவாதம் அல்லது சிலாpன் பழக்க வழக்கம் அது ஏற்புடையதோ வெறுப்புடையதோ ஒட்டு மொத்த மக்களுடையதல்ல என்பதில் தெளிவைப்பெறுவது அறிவு? வரட்டுமா?

    Reply
  • thurai
    thurai

    //அன்றிருந்து இன்றுவரை பாறை பிளந்து பயனாக்கும் விவசாயிகள் /நாலுமுழ உடம்பை வளர்க்க நாற்பது முழம் தழுவும் தொழிலர் /உயிரைக் கைப்பிடித்து உயரக் கடலேறும் மீணவர்கள் இவர்களும் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள் வாழ்ந்தார்கள்! இவர்கள் இதுவரை எந்தத் கணிப்பிலும் 90 சதவீதத்த்தை குறைந்து வாழ்ந்ததாக இல்லை இப்படியிருக்க உங்களுக்குக் கிடைத் உதாரணங்கள் ஒனறிரண்டை வைத்து ஏனையோரை வேதனைப்படுத்த வேப்பிலை அடிக்கிறீர்க்கள்?//

    நல்ல கருத்து. மேற்கூறியவர்களே இலங்கைத்தமிழரின் உருமை பற்ரிப் பேசவும் விவாதிக்கவும் உருமையுடையவர்கள். புலத்திலிருந்து குரல் கொடுப்போர் அனேகர் தமிழரை சிங்களவர் ஆழப்படாது தாங்களே பரம்பரையாக அதிகாரத்துடன், ஆழ்வதற்கு உருமையுடையவர்களாகக் கருதுபவர்களேயாகும்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    //இலங்கையில் லஞ்சஊழலை வளர்த்த பெருமை யாழ்ப்பாணத்தவர்களையே சாரும் – அல்வாய் அழகசுந்தரம் //

    இலங்கையில் மட்டுமல்ல , இந்தியாவின் தமிழ்நாட்டிலும் லஞ்சம் அதிகரிக்கவும் , வீட்டு வாடகை அதிகரிக்கவும் காரணமானவர்கள் இதே யாழ்பாணத்ததார்தான். 500 ரூபா வாடகை வீட்டுக்கு 1000 ரூபா வாடகை கொடுத்து ஷோ காட்டியவர்கள். எல்லாம் வெளிநாட்டு பணம். வெளிநாட்டு உறவுகள் வெள்ளைக்காரரின் கோப்பை கழுவி லட்சம் லட்சமாக அனுப்பிய பணத்தில் அனைத்து சுகமும் அனுபவித்தவர்கள். அதையே பெருமையாகவும் காட்டிக் கொண்டவர்கள். பொய்யான மவுசு வாழ்கைக்கு இவர்களை விட்டால் வேறு யாரு உண்டு?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சரணணுக்கு ஓரிரு உதாரணங்கள் சதாரணமாகவே படுகிறது. முப்பது வருடங்கள் திரண்டு வந்த செல்வங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டிருக்கிறது. அனுபவிப்பதற்கு எவ்வளவு உரிமையிறதோ அதேபோல அடிமைத்தனற்கு எதிராக போராடவும் எமக்கு உரிமையிருக்கிறது வந்த மாற்று போராளிகள் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டார்கள். தேடிப் போய் இந்தியாவிலும் தேடிப்போய் மூலவேரையும் அறுத்தார்கள். ஏன்? பாறையைப் பிளந்தவர்களுக்கு விடிவு கிடைத்துதிடும் மென்று. ஆயிரம் வருடம் கூடிவாழ்ந்த
    தமிழ்மூஸ்லீம் மக்கள் சில மணத்தியாலங்களில் காதுத்தோடும் இழுத்தறுத்து அனாதரவாக வழியனுப்பிவைக்கப் பட்டார்கள்.

    அட அந்த மூர்கன்தான் பயங்கர ஆயுதத்துடன் நிற்கிறான் மக்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றால் புலம்பெயர்த புண்ணுக்கு கோஷ்றிகளும் அதே கோலம் தான். பாதாளஅறையில் சித்திரைவதைசெய்து அடிபோட்டு கப்பம் வாங்குவதிலிருந்து உள்ள கோவில்களை சொந்தமாக்குதல் ஊர்வலம் போடுதல் வரை. ஊர்வலம் ஆர்பாட்டம் உண்ணாவிதரம் இருந்தார்கள் அதையும் சுத்தமாக செய்தார்களா? வன்னியில் பிடித்து பயணகைதிகளை விடுவிக்க சிங்களமக்கள் ஊர்வலம் போராட்டம் நடத்த வேண்டியதாகயிருந்தது.

    சரணன் நாமும் சாதிவேறுபாடு பிரதேசவாதம் எம்மைப்போல் மற்றவனையும் நேசி என்பதை கற்று வந்தோம்.அப்படித்தான் வாழ ஆசைப்பட்
    டோம்.இனியும் ஆசைப்படுவோம்.நானும் யாழ்பாணத்தவன் தான். ஏற்கனவே தமிழ்மக்களுக்கு தற்கொலையை படையை ஏவிவிடுகிற குணம் யாழ்பாணத் தமிழனுக்குதான் வரமுடியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சரணனின் கருத்து நியாயமானது. சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாண சமுதாயத்தையே எப்படிக் குறை சொல்ல முடியும். இன்று புலம்பெயர்ந்து தமது சொந்த நலன்களுக்காக புலிவால் பிடித்து ஏனையவர்கள் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லையென்று சுயநலத்தோடு வாழ்பவர்களை விட, யாழ் சமுதாயம் என்றும் உயர்வானது தான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இரண்டாம் உலகமாகயுத்தம் நடந்து அறுபத்திநான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெமனியர்கள் தங்கள் லீவுநாட்களை கழிப்பதற்கு டென்மார்க் நெதர்லாந்து பெல்ஜியம் போலாந்துக்கு போவதுண்டு. எவ்வளவு தான் பணவசதி படைத்தவர்கள் ஜேமனியர்கள் இருந்தாலும் கூட அயலவர்களுக்கு உள்ளுற ஒரு வெறுப்பு இருப்பதை காணமுடியும் பார்திபன்.

    அதுவரைக்கும் ஜனநாயக ரீதியாகத்தான் கிட்லர் ஆட்சிஅமைத்தார். மூலதனத்தின் உதவியுடன் தான் நாசிகள் ஆட்சி அமைத்தார்கள். புதிய ஆய்வாளர்கள் கிட்லரை மட்டுமல்ல அந்த சமூகத்தையும் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகம் சிறிது விழிப்புற்றிருந்தால் நாசிகளால் நடந்து பேரழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று வாதிடுகிறார்கள்.

    83 இனக்கலவரத்தில் தமிழ்மக்களை பாதுகாத்து அனுப்புவதற்கு மிகக்குறைந்தளவு சிங்கள மக்களாவது இருந்தார்கள். கடையர்கள் லொறியில் தமிழ்பகுதிக்கு வந்தபோது ஒரு சிங்களப்பெண்மணி லொறிக்கு முன் விழுந்து படுத்தாள் தன்னை மிதித்துத்துத்தான் இந்த லொறி அப்பால் போகமுடியும் என்று. வந்த வழியே லொறி திரும்பி போயிற்று. இப்படியே இன்னும் சில சம்பவங்களை சொல்லமுடியும். தமிழ் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில்லிருந்து துரத்தியடிக்கும் போது ஒரு யாழ்பாணி குரல்கொடுக்க முடியவில்லை என்று எண்ணும்போது………நியாயத்தை பார்பதா?யதார்தத்தைப் பார்பதா?

    Reply