தென் மராட்சி தெற்கு, மறவன், புலோலி கைதடி மற்றும் நாவற்குழி பிரதேச மக்கள் இன்று தொடக்கம் தமது நிலங்களில் குடியேறுவதற்கும் நடமாடுவதற்கும் அனுமதிக்கப்படுவதுடன் மின்சாரம் குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மீள் குடியேற்றம் மீள் விவசாயம் தொடர்பான இப்பகுதி மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து ஜனாதிபதியுடனும் பிரதேச இராணுவ அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக மெற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இப்பகுதி நெல் வயல்கள் விவசாயிகளிடம் இன்று கையளிக்கப்படுவதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். தென்மராச்சி பலநோக்குச் கூட்டுறவுச்சங்கத் தலைவர் நா.திருச்செந்தூர்நாதனின் தலைமையில் கைதடி நாவற்குழி முருகன் கோவிலுக்கு முன்பாக இன்று நடைபெற்ற நிகழ்வில் உரைநிகழ்தும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரைநிகழ்த்திய அமைச்சர; தற்போதைய அமைதியான சுழ்நிலை ஏற்படுவதற்கு காரணமாகவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்பிரதேச மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தற்போதைய சுழலைப் பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மக்கள் முன்னேற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.