நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சங்கக்காராவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் அவரை வசை பாடியபடி பெவிலியன் நோக்கி செல்லுமாறு செய்கை செய்ததால் அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு ஆட்ட நடுவர்கள் உத்தரவிட்டனர்.
இலங்கை விளையாடும் போது 14-வது ஓவரில் இது நடந்தது. இந்த மோசமான நடத்தையை நடுவர்களான அஷோக டிசில்வா, விஜேவர்தனே ஆகியோர் கண்டித்தனர்.
இதனால் உடனேயே தவறை உணர்ந்த சயீத் அஜ்மல் இருவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, ஆட்டம் முடிந்த பின்பு சங்கக்கராவிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.