லெக் சின்டன் டென்னிஸ் பட்டம், வான்கூவர் டென்னிஸ் தொடரில் இறுதி வரை வந்தது ஆகியவற்றால் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 74-வது இடம் பிடித்துள்ளார்.
மகளிர் இரட்டையர் உலக தரவரிசைகளில் சானியா மிர்சா 49-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் 13 இடங்கள் முன்னேற்றம் கண்டு 140-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
லெக் மேசன் டென்னிஸ் தொடரில் உயர் தரவரிசையில் உள்ள மாரின் சிலிச்சை வென்றதன் மூலம் சோம்தேவ் தேவ்வர்மன் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார்.