குமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அந்தப் பணத்தை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமரன் பத்மநாதனுக்கும், ஐயன்னா குருப் என்ற புலி ஆதரவு நிறுவனத்திற்கும் சொந்தமான கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கணக்குகளில் அதிகமானவை சுவிட்சர்லாந்து மற்றும் சென் மோரிஸஸ் ஆகிய நாடுகளில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சில கப்பல் நிறுவனங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடம் நடாத்திய விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது
மகுடி
நாட்டை முன்னேற்ற இலங்கைக்கு பணப் பற்றாக் குறை உள்ளது. அனைத்து புலம் பெயர் தமிழர்களும் இப்போதும் சேர்த்து நாடு செழிக்க கொடுத்து உதவுங்கள்.
sanath ekanayake
Politics is the dirtiest game in the world. Now the emerging news is that KP surrendered to the GOSL with some kind of agreement..God only knows whats going on.
பார்த்திபன்
வங்கிக் கணக்குகளை தற்போது முடக்கி என்ன பயன்?? வேண்டுமானால் அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து வேறு கணக்குகளுக்கு, மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்குங்கள் பயன் கிடைக்கும்……
BJM
கண் மூடித் தனமாக வெளி நாடுகளில் புலிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களின் அட்டகாசங்களுக்கு துணை போனவர்களும் வேச்த்மின்ச்டேரில் (Westminter) புலிகளை காப்பற்ற ஒப்பாரி வைத்தவர்களும் இப்ப தங்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் எது வித சம்மந்தமும் இல்லாதவர்கள் போல் திரிகிறார்கள்.
சண்டைக்கு பழகிப் போனவர்கள் ஜனநாயகம் திரும்புவதை ஏற்க மறுகிறர்களோ??
மாயா
//பார்த்திபன் on August 13, 2009 12:57 am வங்கிக் கணக்குகளை தற்போது முடக்கி என்ன பயன்?? வேண்டுமானால் அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து வேறு கணக்குகளுக்கு, மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்குங்கள் பயன் கிடைக்கும்……//
பார்த்திபன், இடம் மாறிய பணம் குடும்ப சொத்தாகி விட்டது. சுவிஸ் லுசர்னில் இருக்கும் புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு மக்கள் கொடுத்த பணத்தை பாதுகாப்பதற்கு தனது சொந்தங்கள் பெயரில் வைப்பிட்டுக் கொண்டிருந்ததாக சில காலத்துக்கு முன் அவரது உறவினர் ஒருவர் சொன்னார்.
மக்கள் கொடுத்த பணத்தில் தம் குடும்பத்துக்கு புனர் வாழ்வு கொடுத்திருக்கிறார். நல்ல சேவை. இவர்கள் நாட்டுக்கு தேவை.
பார்த்திபன்
மாயா
நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் ஒரு கணக்கின் குறைந்தது 5 வருட வரவு செலவுகளை வங்கியிடமிருந்து பொலிசாரால் பெற முடியும். அந்த வகையில் குறிப்பிட்ட கணக்கிலிருந்து பெறப்பட்ட பணத்தின் விபரங்களை கணக்கை கையாண்டவர் சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையில் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த பொலிசாருக்கு உரிமை உண்டு. இதற்கான நடவடிக்கைகளை பொலிசார் எடுப்பதற்கு பணம் கொடுத்த மக்கள் இதுபற்றி பொலிசாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.