புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியொருவர் பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த அப்துல் சலாம் பாத்திமா யெஸ்மின் என்னும் பெயரில் நடமாடும் தற்கொலைப் படையைச் சேர்ந்த இந்தப் பெண் உறுப்பினர் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்றார்.
இவர் கொழும்பு 12, பழைய சோனகத்தெருவை வசிப்பிடமாகக் கொண்டிருப்பதாக அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பெண்ணினது தேசிய அடையாள அட்டை இலக்கம் 857835641எ யாகும். இவர் பற்றிய தகவல் தெரிவோர் பொலிஸ் தலைமையகத்துடன் 011-2421111 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் 011-2321839, 011-2451636, 011-2384401 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அல்லது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துடன் 011-2320141 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது கொழும்புப் பொலிஸின் அவசர நடவடிக்கைப் பிரிவின் 011-2243333 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
tetra
இனி புலி என்ற பெயரில் இப்படி பல தில்லுமுல்லுக்கள் நடக்கப்போகுது பாருங்கோ
Kirupa
கொழும்பில இருக்கிற த்மிழர்களிடம் பணம் கறக்கும் தொலைனோக்கு நடவடிக்கை.
வெற்றியின் அடையளஙகள் அதிகமாகவே இருக்கிறது.
மாயா
பிடிபட்டுள்ள புலிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே இப்படியான தகவல்கள் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு சந்தேக நபர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது.
அதைத் தவிர அப்பாவிகள் சில தனிப்பட்ட குரோதங்கள் காரணமாக புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் என சிலரால் போடப்படும் பெட்டிசன்களின் அடிப்படையில் கைதாகி அநியாயமாக சிறைகளில் வாடுகிறார்கள்.
தவிரவும் லஞ்சம் கொடுத்து முகாமை விட்டுத் தப்பியவர்களும் அநியாயமாக சிறை செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளமை வேதனையானது.
சாந்தன்
இதில ஒரு ஆச்சரியமுமில்லை. தமிழரிட்ட பறிச்சு முடிஞ்சுது. இனி முஸ்லிம்களுக்கு அலுப்பு குடுக்க புது ஐடியாவோட வந்திருக்கினம். அவ்வளவுதான்.