ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனப் பேரணி சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20-ந்தேதி நடத்தப்படுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை செயல்படுத்த வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் தலைமையிலான குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்திருந்தது. நாங்கள் சுவாமிநாதனைச் சந்தித்து இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறியபின்னர் அவர் இலங்கை செல்வதை தவிர்த்து விட்டார்.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றார் நெடுமாறன்.
மாயா
நெடுமாறன் அவர்களே, நீங்கள் போக வேண்டியதுதானே? மகிந்த நிச்சயம் நெடுமாறனை முகாமுக்கு அழைத்துச் செல்வார்?