மலை யகத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் இரவு வேளைகளிலும் மழை பெய்து வருவதோடு காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.
கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக மலையகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மவுசாகலை, காசல்ரீ, கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திரா உட்பட விக்டோரியா, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
எனினும் இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் அதிக மழை பெய்து வருவதும் ஆடிக் காற்று பலமாக வீசுவதும் குறிப்பிடத்தக்கது.