இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணி தோற்றதற்கு கிரிக்கெட் சூதாட்டமே காரணமென்று முன்னாள் வீரர் அப்துல் காதிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“ருவென்ரி20′ உலகக் கிண்ணத்தை வென்ற அணி இவ்வளவு மோசமாக விளையாடுவதை நம்ப முடியவில்லை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் இருக்குமோ என சந்தேகிக்கிறேன். இத்தொடரின் போது, பாகிஸ்தான் வீரர்களை சூதாட்ட முகவர்கள் தொடர்பு கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாகிஸ்தான் அணிக்கு இலங்கைத் தொடர் மிக மோசமாக அமைந்துவிட்டது. சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்பு உயர்மட்ட அளவில் குழு அமைத்து முழு அளவில் விசாரிக்க வேண்டுமென்றார்.