அவசர காலச் சட்டத்தை நாட்டில் மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 64 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் கிடைத்தன.
மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. வாக்கெடுப்பு நடந்த சமயம் ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் இருக்கவில்லை.