தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தடுப்புக் காவல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர், விடுதலைப்புலிகளுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் மீண்டும் ஆஜர்ப்படுத்துவதற்கான திகதியை வழங்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.