480 கிலோ எடையுள்ள அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-10, 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-76, சிறிய ரக கிளேமோர் குண்டுகள்- 20, ரி-56 துப்பாக்கி ரவைகள்-300, படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இணைப்பு இயந்திரம்- 01 மற்றும் பல்வேறு ஆயுதங்களையும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.