வவுனியா நகர சபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். வவுனியா செல்லும் அவர் சிவன் கோயிலில் விசேட வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எல்மெரல் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாக ஐ.தே.க. யின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வவுனியா விஜயம் தொடர்பாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூய கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைத் தான் சந்திக்க உள்ளதுடன் பொதுமக்களையும் சந்தித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.