கதிர்காம தீமிதிப்பில் 100 பேர் படுகாயம்

katharakama.jpgகதிர்காமம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ மிதிப்பில் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இதில் 50 பேர் மோசமான எரி காயங்களுடன் கதிர்காமம் மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காம முருகன் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இத் தீ மிதிப்பு நிகழ்வில் 417 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதியளவு அனுபவமற்றவரும் ஆசாரங்களைக் கடைப்பிடிக்காதவருமான ஒருவரின் வழிகாட்டலில் தீ மிதிப்பு இடம்பெற்றமையே இவ்வசம்பாவிதம் நிகழ காரணமென கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Theepan
    Theepan

    மதம்களை பின்பற்றுவது ஓவருவரின் தனிப்பட்ட உருமை ஆனால் அறிவு பூர்வமாக சிந்தித்து நெருப்பில் நடப்பதயும் வெளிநாடுகளில் வீதி வீதியாக தேருக்குபின் உருளுவதையும் சுவாமியை காவிக்கொண்டு நடந்து பொது இடங்களில் தடங்கள் ஏற்படுத்துவதையும் தவிர்க்கலாமே.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கத்தான் வேண்டும். ஆனால் விஞ்ஞான பூர்வமாக விளக்க அழிக்கப்பட்ட பின்னரும் தீமிதிப்பு, தூக்குக் காவடி என்பதெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டிய செயல். இவற்றுள் பெரிய ஜோக்குகள் என்ன வென்றால் பிழையை மற்ரவனின் தலையில் போடுவது.

    ஆசாரமற்றவரின் வழிகாட்டலில் நடைபெற்றிருந்தால் ஆசாரமற்றவனை மட்டுமே கடவுள் எரித்திருக்க வேண்டும் . மாறாக 100 பேரை எரித்திருக்கிறார். இது போலவே இரண்டு வருடங்களின் முன்னரும் மாணிக்க கங்கைகுள் வைத்து பொலிசார் கொட்டனால் போட்டுத்தள்ளினர். முருகன் ஒண்டும் சொல்லவில்லை. இந்தமாதிரி சம்பவங்கள் வருடாவருடம் நடைபெறுபவை. இதில் மதவெறி இனவெறி கொண்ட பொலிசை குற்றம் சொல்லாமல், ஆசரம் அற்றவனை குற்றம் சொல்லாமல் கடவுளை காப்பாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. எத்தனை பெரியார், எத்தனை ஆபிரகாம் கோவூர் வந்தாலும் திருந்துவதாக தெரியவில்லை!

    மத அனுட்டானங்கள் எனச் சொல்லி வெளிநாடுகளில் ’போக்குவரத்துக்கு தடங்கல்’ பற்றியும் சொல்லவெண்டும். வெளிநாடுகளில் மதவழிபாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் போக்குவரத்துக்கு தடங்கல் எனின் லோக்கல் பொலிசார் கடமைக்கு வருவர். அதற்காகத்தானே நாம் வரி செலுத்துகிறோம். அதேபோலவே எல்லா மதத்தினரும் செய்கிறார்கள். அதில் என்ன தடங்கல் என விளங்கவில்லை. மாறாக உள்ளூர் அரசியல் வாதிகள் இவ்வாறான விடயங்களை விரும்புகிறார்கள். ஒன்று அவர்களின் வோட்டு அரசியல், மற்றையது லோக்கல் வியாபாரம், அதனால் கிடைக்கும் வருமானம், வரி, தொழில் வாய்ப்பு. இதை மைக்கிரோ எக்கணமிக்ஸ் இல் பார்க்கலாம்.

    Reply
  • B J Mariar
    B J Mariar

    FIRE AND SAFETY ONLY APPLICABLE TO WESTERN COUNTRIES

    Reply