ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்

rajanikanth.jpgரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்ன தானம் வழங்க வந்த அவர் பேட்டி அளிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கேயோ பிறந்து,  தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.  இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய்,  தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் அவர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    எந்திரனை ஓட்டவேண்டுமே!

    Reply
  • மாயா
    மாயா

    ஆளை விடுங்கடா சாமி. டூ லேட் பாபா.

    Reply
  • Kirupa
    Kirupa

    “எந்திரனை ஓட்டவேண்டுமே!” புலம்பெயர்ந்த தமிழன் தான் அதற்கும் உதவி செய்ய வேண்டும்? அவர்களை கவர இன்னும் பெரிய கவரப்புக்ளுகு இடமுண்டு என்பதும் தெரிகிறது..?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கிருபா,
    ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கும் புலம் பெயர்ந்த தமிழன் அவரின் படத்தை ஓட வைப்பதற்கும் என்ன சம்பந்தம். மாயா சொன்னது போல் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் என்பது டுலேட். எனி இவர் வருவதும் ஒன்று தான், வராமல் இருப்பதும் ஒன்று தான். இவ்வளவு காலமாக திடமான முடிவெடுக்க முடியாமல் இழுத்தடித்ததே இவரின் கையாலாகாத்தனம். எனி இவர் வந்து எதைச் சாதிக்க முடியும். பேசாமல் முன்பு போல் வேண்டுமானால் ஏதாவது ஒரு கட்சிக்கு அப்பப்போ சவுண்டு விட்டுக் கொண்டிருக்கலாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    அது சரி நீங்க ஒருமுறை வந்தாலே நூறுமுறை வந்தது போல்தானே; அதனால் அடிக்கடி தொல்லை கொடுக்கலாமா? ஏதாவது ஒரு மலை அடிவாரத்தில் தங்கபடாதா? கதம் தகம்;

    Reply