வவுனி யாவில் அகதி முகாம்களிலுள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ, சொறி, சிரங்கு தடுப்பூசி மருந்தேற்றும் 3 நாள் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி இருப்பதாக 40 சுகாதார அமைச்சு தெரிவித்தது. முகாமிலுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவிருப்பதுடன் நோய்தடுப்பு வில்லைகளும் வழங்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சிறுவர்களுக்கான ஐ.நா.பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) ஆகியன ஒன்றிணைந்தே இந்த வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக வன்னிநாயக்க கூறினார். தொண்டர் அடிப்படையில் 1,200 பேரும் குடும்ப சுகாதார மருத்துவச்சிகள் 140 பேரும் இதற்கான நடவடிக்கைகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.