பாகிஸ் தானுடனான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பு செய்ய முடிவு எடுத்தது
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது. கம்ரன் அக்மல் 45 ஓட்டங்களையும், யூனுஸ் கான் 44 ஓட்டங்களையும், உமர் அக்மல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் குலசேகர 10 0 74 1, மிரண்டோ 10 0 46 1, பெர்னாண்டோ 10 1 62 1, மதேவ்ஸ் 10 0 41 2, முரளிதரன் 10 0 64 2,
பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக மஹேல 123 ஓட்டங்களையும், தரங்க 76 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் கபுகெதர ஆட்டம் இழக்காமல் 08 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொதம்மாத் ஆம் 9.3 1 45 1, அப்துல் 9 0 62 1, சகிட் அபிரிடி 6 0 45 0 , அஜ்மல் 9 0 54 2, மாலிக் 6 0 37 0
மஹேலக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
kumarathasan
Im so delighted by this, when you look at it, its unbeliveable target and srilanaka made a great record. its history making in one day cricket .thanks for the great news.
itam
உபுல் தரங்கா 96 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அஜ்மல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் அது அவுட் இல்லை. பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது ரீ-ப்ளேயில் தெரிந்தது
289 ரன்கள் இலக்கை நிர்ணயித்த நம்பிக்கையில் களமிறங்கிய பாகிஸ்தான், இலங்கை அணியின் துவக்க வீரராக உபுல் தரங்காவுடன் மகேலா ஜெயவர்தனே களமிறங்குவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மோசமான கள வியூகம், மோசமான ஃபீல்டிங், இலக்கற்ற பந்து வீச்சு ஆகியவற்றால் ஜெயவர்தனேயும், உபுல் தரங்காவும் அதிரடி முறையில் துவங்கினர். விக்கெட்டுகள் விழுமா அல்லது இலக்கை விக்கெட் இழப்பின்றியே இருவரும் எட்டி விடுவார்களோ என்ற நிலைதான் இருந்தது.
kumarathasan
Thank you for your great news and great message please continue.Thanks.