காத்தான்குடியில் ஷ¤ஹதாக்கள் தினம்

காத்தான்குடியில் பிரதி வருடந்தோறும் நடைபெற்று வரும் ஷ¤ஹதாக்கள் தினம் இன்று (3) அனுஷ்டிக்கப்படுகின்றது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹ¤ஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது தொழுகையில் வைத்து 103 பேர் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்.

இவற்றை நினைவு கூர்ந்து இவ் ஷ¤ஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஷ¤ஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீராஜும் ஆப்பள்ளிவாசலில் இன்று காலை கதமுல குர் ஆன் பிரார்த்தனை என்பன நடைபெறவுள்ளன. ஷ¤ஹதாக்கள் தினத்தை அமைதியாகவும், பிரார்த்தனை நாளாகவும் கழிக்குமாறு ஷ¤ஹதாக்கள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Theepan
    Theepan

    1990.08.03 அன்று கொலைஞர்களால் காத்தான்குடி புனித பள்ளிவாசலிலே அரங்கேற்றப்பட்ட வெறித்தனத்தின் நினைவு நாளையொட்டி இக் கவிதை வடிக்கப்பட்டுள்ளது.

    சுவனத்து மலர்கள்.
    வயிறு பற்றி எரிகிறது!
    வணங்கிக் கொண்டிருந்த எம் சோதரங்களை
    வக்கற்ற மிருகங்கள்
    வதைத்து விட்ட அந்த நாளை எண்ணுகையில்
    வயிறு முழுக்க பற்றி எரிகிறது !!

    வருடங்கள் இருபது ஓடித்தான் போயிடினும்
    விம்மியழுத எம் சோதரங்களின்
    விடியாத அந்த இரவு தான் – இன்னும்
    வி (வ) ழி நெடுகிலும் ரத்தக் கண்ணீராய்
    வடிந்து கொண்டிருக்கிறது.

    பாரினிலே பல பழி செய்வோனும்
    பாஸிஷ பேய்களும் – பஞ்சமாத பாதகனும்
    பார்க்கவெண்ணா வெறியாட்டம்
    பள்ளியிலே…இஷாத் தொழுகையிலே…
    பதபதைக்கத் துடி துடிக்க…

    சின்னஞ் சிறுசுகளும் முதியோரும்
    சீரழிந்து போன – இச்
    சீர் கெட்ட சாதிக்கு
    சற்றேனும் தீங்கொன்றை
    சரித்திரத்தில் நினைத்திலரே.

    மனித நாகரீகமறியா
    மதுவுண்டு மாதுண்ட மானுடம்
    மகிமை பொங்குமந்த மஸ்ஜிதில்
    மதி கெட்டா பலியெடுத்தார்- எம்
    மாணிக்கச் செம்மல்களை.

    முந்தானை ஏந்தியும்
    முன் கை சேர மண் எறிந்தும்
    முகம் தாழ்த்தி முழங்காலிலும்
    முன் நெற்றி நிலம் வைத்து – சுஜீதிலும்….

    கண்ணீர் ஆறாய் பெருகிட
    கண்ணிய இறையிடம்
    கதறிக் கேட்ட துஆக்கள் – எம்
    காதுகளுக்குள் இன்னும் ரீங்காரத்துடன்…

    ஆயுதம் – உலக மெங்கினும்
    ஆலயத்துள் கொண்டு செல்லார்.
    அந் நாகரீகமறியா கொலைஞர்கள்….
    அல்லாஹ்வே! நூற்று மூன்று உயிர்களை
    அவ்விடத்திவே அழித்து விட்டார்

    ஒரு நாளன்றி ஒரு நாள்
    ஒவ்வொரு வெறியனும்
    ஓவென்று கதறியழுது
    ஒருவருமே உதவிடாது
    உருக்குலைந்து மரித்திடுவார்
    உலகுக்கும் புரிந்திடும் என்றல்லோ
    உறவெல்லாம் சாந்தி சொன்னார்.

    தசாப்தங்கள் இரண்டென்ன
    தரணியே உள்ள மட்டும்
    தாங்கிக்க முடியாத – அதே
    தவிப்புத்தான் எங்களுக்கு.
    இராச் சோறு பரிமாற
    இசைவாக இருந்த குடும்பம்
    இறை வீட்டில் வெறியாட்டம் கேட்டு
    இரத்தம் உறைந்தல்லோ போனார்கள்

    பொங்கி வரும் கண்ணீரை
    பொறுமையுடன் உள்ளிழுத்தோம்
    நொந்து போன மனங்களுக்கு – பெரு
    நெஞ்சத்தோடு மருந்திட்டோம்.
    இருந்தாலும் எமக்கு – இன்றும்
    இதயங்களை வருடுகையில்
    இலேசாகவல்ல.. மிகக் கனமாகவே
    இன்னும் வலிக்கிறது.

    எம் சோதரங்களின் சுவன வாழ்விற்காய்
    எவர் – இறை கேளா விட்டிடினும்
    என் கண்கள் மட்டும் சதா….
    என் ஹிருதயமும் கூட சதா….

    -ஏயெம்.ஹஸன் அலி
    சவூதியிலிருந்து

    Reply